சகோதரிகளே இது உங்களுக்கு தான்… நமது பெண்கள் சிறந்த முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். கல்வியிலும், நிறுவனங்களிலும் தமக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
இந்த பதிவு வெளியில் எவ்வாறு நாம் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியது.
இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, இதையும் சற்று முயன்று பாருங்களேன். இதர மாற்று வழிகள் இருந்தாலும் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
“இன்னும்; ஈமான் கொண்ட பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தமது வெட்கத் தளங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்;
தங்கள் அழகலங்காரத்தை அதிலிருந்து (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டக் கூடாது; இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்களது மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
மேலும், (ஈமான் கொண்ட பெண்கள்) தமது கணவர்கள், அல்லது தமது தந்தையர்கள், அல்லது தமது கணவர்களின் தந்தையர்கள், அல்லது தமது புதல்வர்கள், அல்லது தமது கணவர்களின் புதல்வர்கள், அல்லது தமது சகோதரர்கள், அல்லது தமது சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தமது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆண்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாதளவு வயதானவர்கள்) பெண்களது மறைவான அங்கங்களைப் பற்றி அறியாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தமது கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், ஈமான் கொண்டவர்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நடந்திருப்பின்) நீங்கள் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றிப் பெறும் நோக்கில், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்”. (அல்குர்ஆன் 24: 31)
01. சகோதரிகளே உங்களது ஆடை அணிகளங்கள் கண்ணியமானதாக இருக்கட்டும். ரொம்ப இறுக்கமாகவும் (டைட்டா) இல்லாமல் அதிக மெல்லியதாக (லூசா) கவும் இல்லாமல், கண்களை கவராமல், உறுத்தாமல் கச்சிதமாக இருக்கட்டும்.
02. உடலை முழுவதும் மூடும் ‘புர்கா’ அல்லது ‘அபாயா’ அணிவது உடை விடயத்தை எளிதாக்கிவிடும். அப்படியில்லை என்றால், முழுக்கை ‘ஷல்வார்’ அல்லது முழுக்கை ‘குர்தா’ போன்றவை அணிந்து தலையை மூடும் scarf போட்டுக் கொள்ளலாம்.
03. அதிக அலங்காரங்களையோ வாசணை திரவியங்களையோ பயன்படுத்துவதை தவிர்க்கப் பாருங்கள்….
04. ஆண்களிடம் நட்பாகப் பழகுவது தவறில்லை. ஆனால்… அது ஒரு கண்ணியமிக்க ஒழுக்கமான நட்பாக மட்டுமே இருக்கட்டும். மாறாக, அவசியமில்லாத ‘வெட்டி’ அரட்டைகளுக்கும் ‘வழிசல்’களுக்கும் இடம் கொடுப்பதாக இருக்க வேண்டாம்.
05. யாரேனும் ஒருவர் தங்களிடம் நட்பின் பேரில் வரம்பை மீறி உரிமை எடுத்துக் கொள்ள முற்பட்டால், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதற்கு தயங்காதீர்கள்.
06. புன்னகையுடன் இருங்கள். ஆனால், தேவையின்றி சிரிக்கும், கட்டுப்பாடில்லாமல் பேசும் பெண்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டாம்.
07. சகோதரிகளே நன்பர்களைப் பற்றியோ, அலுவலக சக பணியாட்கள் பற்றியோ பெற்றோரிடம் எந்த ஒளிவு மறைவும் வைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஆண்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். அது உங்கள் நன்பர்களை உங்களுடன் வரைமுறைகளோடு நடந்து கொள்ளச் செய்யும்.
08. ‘Late Night’ போன் கால் களையும் ‘sms’ ‘Chath’ களையும் தவிருங்கள்……
09. தற்போது batch party, அல்லது batch tour போன்றவை சகஜமாகி விட்டது. அந்த சந்தரப்பங்களில் முடிந்தளவு சக பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்ளுங்கள்.
10. சகோதரிகளே எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக உங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள். பொறுமையுடன் பிரச்சனைகளை கையாள்பவராக இருங்கள்.
மொத்தத்தில், பிறரின் பார்வைக்கு நீங்கள் ஒரு மதிப்புமிக்க கண்ணியமான, ஒழுக்கமுள்ள, பண்பான இஸ்லாமியப் பெண்ணாகத் தெரிய வேண்டுமே தவிர ஒழுக்கமற்றப் பேதை பெண்ணாக அல்ல.