இலங்கையின் ஜனாதிபதி பதவி 1972 இல் நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜே.ஆர். ஜெயவர்தனவினால் முன்வைக்கப்பட்ட 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் வாயிலாக இந்த பதவிக்கு சகல அதிகாரங்களும் உள்ளடங்கிய நிறைவேற்று அதிகார முறைமை சேர்க்கப்பட்டது.
_________________________________________________________________________
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதி - வில்லியம் கோபல்லவ
• பதவிக்காலம் | 22 மே 1972 - 4 பெப்ரவரி 1978 (5 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்)
• 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் இலங்கை என மாற்றப்பட்ட போது அவர் இலங்கையின் கடைசி பிரதமராகவும் அதன் முதலாவது (நிறைவேற்று அதிகாரமற்ற) ஜனாதிபதியாகவும் பணியாற்றினார்.
மேலதிக தகவல்களுக்கு - வில்லியம் கொபல்லாவ
_________________________________________________________________________
முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - ஜே.ஆர். ஜெயவர்தன
• பதவிக்காலம் | 4 பெப்ரவரி 1978 - 2 ஜனவரி 1989 (10 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 29 நாட்கள்)
• அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
• 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு அவர் இலங்கை சனாதிபதியாக பதவி வகித்தார்.
மேலதிக தகவல்களுக்கு - ஜே.ஆர். ஜெயவர்தன
_________________________________________________________________________
இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - ரணசிங்க பிரேமதாச
• பதவிக்காலம் | 2 ஜனவரி 1989 - 1 மே 1993 (4 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்)
• அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
• அவர் மே தினக் கூட்டமொன்றில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.
மேலதிக தகவல்களுக்கு - ரணசிங்க பிரேமதாச
_________________________________________________________________________
மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - டி.பி. விஜேதுங்க
• பதவிக்காலம் | மே 1, 1993 – நவம்பர் 12, 1994
• அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
• ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையைத் தொடர்ந்து அரசியலமைப்பு ரீதியாக டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
மேலதிக தகவல்களுக்கு - டி.பி. விஜேதுங்க
_________________________________________________________________________
நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - சந்திரிகா குமாரதுங்க
• பதவிக்காலம் | (12 நவம்பர் 1994 – 19 நவம்பர் 2005)
• அரசியற் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி
• 1994 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார்.
மேலதிக தகவல்களுக்கு - சந்திரிகா குமாரதுங்க
_________________________________________________________________________
ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - மஹிந்த ராஜபக்ஷ
• பதவிக்காலம் | 2005 நவம்பர் 19 முதல் 2015 ஜனவரி 9
• அரசியற் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி
• சுமார் மூன்று தசாப்த காலம் நடைபெற்ற உள்நாட்டு பயங்கரவாத யுத்தத்தை இரானுவ ரீதியாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.
மேலதிக தகவல்களுக்கு - மஹிந்த ராஜபக்ஷ
_________________________________________________________________________
ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - மைத்திரிபால சிறிசேன
• பதவிக்காலம் | 9 ஜனவரி 2015 - 18 நவம்பர் 2019
• அரசியற் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி
• 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இன்னும் பல கட்சிகள், இயக்கங்களின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலதிக தகவல்களுக்கு - மைத்திரிபால சிறிசேன
_________________________________________________________________________
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - கோட்டாபய ராஜபக்ஷ
• பதவிக்காலம் | 18 நவம்பர் 2019 - 14 ஜூலை 2022
• அரசியற் கட்சி | ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
• உலகளாவிய கோவிட் -19 தொற்றுநோயுடன் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகியதால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் வெடித்தன, இதன் விளைவாக கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வௌியேறினார்.
மேலதிக தகவல்களுக்கு - கோட்டாபய ராஜபக்ஷ
_________________________________________________________________________
எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - ரணில் விக்கிரமசிங்க
• பதவிக்காலம் | 21 ஜூலை 2022 முதல் -
• அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
• கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு சென்றதன் பின்னர் அரசியலமைப்பின் படி பாராளமன்ற உறுப்பினர்களின் பெருன்பான்மை ஆதரவைப் பெற்று ஜனாதிபதியானார்.
மேலதிக தகவல்களுக்கு - ரணில் விக்கிரமசிங்க
_________________________________________________________________________
அநுர குமார திஸாநாயக – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 9வது ஜனாதிபதி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விருப்புரிமை வாக்குகளின் இரண்டாம் கட்ட எண்ணிக்கை தேவைப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் வெற்றி பெற்று, அவர் செப்டம்பர் 22, 2024 அன்று பதவியேற்றார்.
மேலதிக தகவல்களுக்கு - அநுர குமார திஸாநாயக

Post a Comment