மலையக இராச்சிய ஆட்சியின் போது நாட்டின் தலைநகரான செங்கடகல கண்டியை அடைவதற்கு மகாவலி ஆற்றைக் கடந்து செல்வதற்கு பாலங்கள் இருக்கவில்லை.
இதற்காக படகுகளின் உதவியுடன் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. பாலங்கள் கட்டுவதையும், சாலைகள் போடுவதையும் மன்னர்கள் தடை செய்தனர். எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தலைநகரை பாதுகாப்பதற்கு மன்னர்கள் இவ்வாறான நிலைப்பாட்டை கையான்டார்கள்.
கண்டியின் புராதன படகுத்தரிப்பிடங்கள்
அக்காலத்தில் மலையக நகரைச் சுற்றி மூன்று மிக முக்கியமான படகுத்தரிப்பிடங்கள் இருந்தன. அவை அழுத்கங்தோட லேவல்ல, கனொருவ மற்றும் கட்டுகஸ்டதோட்டை ஆகும். இவை அரச சிற்றரசர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது. இப்போது இந்த மூன்று படகுத்தரிப்பிடங்களிலும் கட்டப்பட்ட பாலங்களை நீங்கள் காணலாம். இதில் லேவல்ல பாலம் 1993 இல் கட்டப்பட்டது. அதற்கு முன்பு, ஒரு சங்கில்ப் பாலம் அல்லது கம்பி பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
பிரித்தானிய கால ஆரம்பத்தில் மலையக கண்டியின் வதிவிட முகவராக இருந்த ஜோன் டொயலின் கூற்றுப்படி, லேவெல்ல படகுத்தரிப்பிடம் பல்லேகம்பஹா அதிகார சபையினராலும் (மகா அதிகாரம்) மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய ஹிரகே கங்கனம் ஆகியோராலும் நிர்வகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுத்தரிப்பிடத்திற்கு அருகில் படகோட்டுவதற்காக ஒரு குடும்பம் பொறுப்பாக இருந்தது. கட்டுகஸ்தே மற்றும் கன்னொருவ தோபத்கள் மக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. லேவெல்ல படகுத்தரிப்பிடத்தை விட கனொருவ மற்றும் கட்டுகஸ்டதோட்டை படகுத்தரிப்பிடங்களை மகக்கள் அதிமாக பயன்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது
ஆங்கிலேயர்கள் மலையகத்தைக் கைப்பற்றிய பின்னர் சில காலம் மகாவலி கங்கை ஊடாக படகுகளினன் மூலம் கண்டியை அடைந்தனர். ஆனால் இது அவர்களின் வீரர்கள், துப்பாக்கிகள் மற்றும் பொருட்களின் நகர்வுக்கு ஒரு பெரிய தடையாக காணப்பட்டது.
இதற்கிடையில், 1818 ஆம் ஆண்டு ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது, இதன் போது கண்டியை அடைவதற்கு பாலங்கள் இல்லாத குறையை ஆங்கிலேயர்கள் நன்றாக உணர்ந்தனர். ஆரம்ப நாட்களில் கிளர்ச்சி வெற்றிகரமாக பரவுவதற்கான காரணிகளில் ஒன்றாக கண்டி தனிமைப்படுத்தப்பட்ட இடமாக காணப்பட்டமையாகும். இதன் விளைவாக, கொழும்பை ஆண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கண்டிக்கு செல்வதற்கான பாலங்களைக் கட்டத் திட்டமிட்டனர்.
பேராதனை பாலம்
மலையக இராச்சிய ஆட்சியின் போது, மக்கள் லேவெல்லையில் ஆற்றைக் கடந்து கண்டிக்கு சென்றனர். ஆனால் ஆங்கிலேயர்கள் அந்தப் பாதையை மாற்றி பேராதனையில் மகாவலி ஆற்றைக் கடந்து கண்டிக்கு செல்வதற்கு திட்டமிட்டனர். அதற்கமைய மகாவலி கங்கையின் ஆழமான இடமான பேராதனையில் பாலம் அமைக்கும் பணிகளை மலையக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஆங்கிலேயர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.
ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸின் திட்டத்தின் படி, இந்த பாலத்தின் கட்டுமானம் அரசாங்க பொறியாளராக இருந்த 37 வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஜான் ஃப்ரேசரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
அவர் பாலத்தின் திட்டத்தை வடிவமைத்து 1826 டிசம்பரில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். இது ஜனவரி 1933 இல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. அக்காலத்தில் இலங்கையின் மிகப்பெரிய பாலமாக இது இருந்தது. 1,200 தொழிலாளர்களின் உழைப்பு பாலத்தை கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
இப்பாலத்தின் கட்டுமானத்திற்காக புருத எனும் மரம் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக, இப்பாலம் பேராதனை புருதப் பாலம் என அழைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து மரங்களும் கொழும்பில் தேவையான அளவிற்கு வெட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொன்டிருந்த போதே 1827 ஆம் ஆண்டு அது வரை பயன்படுத்தப்பட்டு வந்த கொழும்பு கண்டி ரஜ மாவத்தைக்கு பதிலாக இன்று பயன்படுத்தப்படும் கண்டி வீதி நிர்மானித்து முடிக்கப்பட்டிருந்தது.
ஆற்றின் இரு கரையிலும் கற்களால் கட்டப்பட்ட இரண்டு தாங்கும் தூன்கள் பாலத்தை இணைத்தன. ஒற்றை வளைவுடன் கட்டப்பட்ட இந்த பாலம் 205 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்டது. முழு பாலத்தின் கட்டுமானத்திலும் ஒரு இரும்பு ஆணி அல்லது உலோக கம்பியின் பயன்பாடு இல்லாமல் முற்றுமுழுதாக மர ஆப்புகளைக் கொண்டு இப் பாலம் கட்டப்பட்டது விஷேட அம்சமாகும்.
பாலத்தை பழுதுபார்க்கும் போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதபடி மற்றும் வளைவை சேதப்படுத்தாத முறையில் பழுதடைந்த குறித்த பாகங்களை அகற்றி மற்ற பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்படட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
ஆற்றின் கீழ் நீர் மட்டத்திலிருந்து பாலத்தின் சாலை வரை பாலத்தின் உயரம் 67 அடியாகவும், வளைவின் மேற்பரப்பு வரை 57 1/2 அடி உயரமாகவும் இருந்தது. இதனால், கனமழை காலங்களில் ஆற்றின் நீர்மட்டத்தை இந்த பாலம் சிறப்பாக தாங்கும் என்று கூறப்படுகிறது.
1834 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஆற்றின் நீர் மட்டம் 60 அடியாக உயர்ந்த போதிலும் பாலத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. சாலையின் இருபுறமும் வேலி போடப்பட்டிருந்தது. இன்று, இந்த பாலத்தின் எச்சங்கள் எதுவும் இல்லை,
ஆனால் அதன் மாதிரி வடிவம் இலண்டனில் உள்ள தெற்கு கிங்ஸ்டன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர், கொழும்பிலிருந்து மலையக கண்டி வரை இந்த பாலத்தில் பயணித்த முதல் வாகனம் அஞ்சல் குதிரை வண்டியாகும்.
1866 ஆம் ஆண்டு முதல், மலையக கண்டி மாநகர சபையால் பாலத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் 1881 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 70 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த இந்த பாலம் படிப்படியாக மோசமடைந்தமையால் வாகன போக்குவரத்தை நிறுத்த வேண்டியிருந்தது.
இருப்பினும், அக்டோபர் 14, 1904 வரை, மக்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். பாலத்தில் தொடர்ந்து நடப்பது பாதுகாப்பற்றது மற்றும் ஆபத்தானது என்பதால் புதிய பாலத்தை கட்ட வேண்டிய அவசியம் எழுந்தது. பாலம் அகற்றப்படுவதற்கு முன்னர் கன்னறுவை துறைமுகத்திற்கு அருகில் தற்காலிக பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டதுடன், பின்னர் சேதமடைந்த பாலம் அகற்றப்பட்டு அதன் மர பாகங்கள் பொது ஏலத்தில் விற்கப்பட்டன. 1906 புதிய பாலம் எஃகினால் கட்டப்பட்டது.
கட்டுகஸ்தோட்டையில் இலங்கையின் முதலாவது இரும்புப் பாலம்
இரும்புப் பாலத் தொழில்நுட்பம் 1850 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கையில் பயன்பாட்டுக்கு வந்தது. 1850 மற்றும் 1900 க்கு இடையில், இரும்பு பாலம் கட்டும் தொழில்நுட்பம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. மலையக கட்டுகஸ்தோட்டை பாலம் நம் நாட்டின் மிக நீளமான இரும்பு பாலமாகும்.
மாத்தளை, குருநாகல், நக்கிள்ஸ், ரங்கல ஆகிய வீதிகளை கண்டி நகரத்துடன் இணைப்பதற்காக 1858 ஆம் ஆண்டில் பாலத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இது 1860 இல் கட்டி முடிக்கப்பட்டது. 140 அடி (43 மீட்டர்) நீளமுள்ள பாலத்தின் கட்டுமான பொறியாளர் ஜே. ஏ. கேல் எனும் ஆங்கிலேயர் ஆவார்.
பாலத்தின் மூல நிர்மாணம் தொடர்பாக சிங்கள மொழியில் ஒரு கல்வெட்டையும் அங்கு காணலாம். கற்களால் கட்டப்பட்ட ஐந்து தூண்களும் இருபுறம் அமைக்கப்பட்டுள்ள கல் அடித்தளம் பாலத்தின் கனமான வார்ப்புருவைத் தாங்கியுள்ளது.
பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரங்களின்படி, பாலத்தை நிர்மானிப்பதற்கு 20721 பவுண்கள் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் இரும்பு டிரஸ்கள் (trusses) இங்கிலாந்தின் சிப்பர்ஹாமில் உள்ள ஆர்.பிரதர்ஹுட் கம்பெனியினால் வடிவமைக்கப்பட்டன. . 1939 ஆம் ஆண்டில், கொலன்னாவை அரசாங்க தொழிற்சாலையினால் பாலத்தை முழுமையாக பழுதுபார்க்கப்பட்டது. பாலத்தின் நீளம் 421 அடி, அகலம் 23 அடியாகும். 1962 ஆம் ஆண்டில், பாலம் புதுப்பிக்கப்பட்டதுடன் பாலத்தின் இருபுறமும் நடைபாதைகள் கட்டப்பட்டன.
இந்த பாலம் சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டிகள் செல்லும் வகையில் கட்டப்பட்டது. இதற்கு கவர்னர் ஹென்றி வார்டு தலைமை தாங்கினார்.
அண்மையில் கட்டுகஸ்தோட்டையில் புதிய பாலம் நிர்மாணிக்கப்படும் வரை, இது 150 ஆண்டுகளுக்கும் மேலாக மில்லியன் கணக்கான வாகனங்களின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. பழைய இரும்புப் பாலத்தை இன்றும் நாம் காணலாம்.
தொடம்வல ஹல்லொலுவ சங்கிலி பாலம்
பழைய கண்டி குருநாகல் வீதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே காணப்பட்ட லேவெல்ல படகுத்தரிப்பிடத்திற்கு அருகில் காணப்படும் ஒரு பாலம். இது 1939 இல் கட்டப்பட்டது.
கண்டியில் இருந்து தெடம்வளை செல்லும் பாதையில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. 150 அடி நீளமுள்ள இந்த பாலம் ஹல்லோலுவ மற்றும் தொடம்வலாவை ஆகிய பிரதேசங்களை இணைக்கிறது. இதனால் மக்களுக்கு நடந்து செல்வதற்கு வசதியாக அமைந்தது.
பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட இப் பாலத்தின் பொறியாளர்கள் எச். கென்னத் டி கிரெஸ்டர், ஆஸ்கார் டி. நெம்லெட்டன் மற்றும் டி. ஏ. பீரிஸ் ஆவார்கள். இந்தப் பாலத்தை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் மேஜர் ஜே. L. கொத்தலாவல என்பவர் திறந்து வைத்துள்ளார். சமீபத்தில் இந்த பாலத்தை ஒட்டி புதிய பாலம் கட்டப்பட்டது, மேலும் பழைய கம்பி பாலத்தையும் அருகில் காணலாம்.