அரசியல் பற்றி பேசுவதற்கு முன் சிந்திப்பதற்கு சில விடயங்கள்

அரசியல் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் என்பது பரபரப்பாக பேசப்படும் ஒரு தலைப்பாக மாறி இருக்கின்றது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வேறுபாடுகளின்றி அரசியலின் பக்கம் ஆர்வம் காட்டுவது மிகவும் நல்ல விடயமாக காணப்படுகின்றது.

அந்த இந்த ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தி விட்டு எதிர்கால சந்ததியினருக்கு பொருப்புக் கூற வேண்டிய நாம் “அரசியல் வேண்டாம்” என்று கூறுவது வேடிக்கையான முட்டாள்தனமான விடயமாகும். ஆனாலும் சொல்கிற படி சொல்வதும், எல்லோறும் போவது போல் வாக்களிப்பு நிலையத்திற்கு போய் வருவதும், ஏதோ யாருக்காவது வாக்களிப்பதையும் செய்வதற்கு முன்னர் இதனையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

01. எல்லோரும் போகிறார்கள் என்பதால் பின்னால் போக வேண்டாம்

இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் ஒரு விசித்திரமான அரசியமைப்பைக் கொண்ட நாடுகளாகத் தான் உள்ளது. எனவே இங்கு யார் முற்றிலும் சரி, யார் தவறு என்று யாராலும் சொல்ல முடியாத விடயமாக இருக்கும். நிஜமாகவே பார்த்தால், இந்த சாக்கடை அரசியலில் அப்படிப்பட்ட முழுமையான கருப்பு வெள்ளை கதாபாத்திரங்கள் இல்லாமலும் இல்லை.

அதனால்தான் ஒவ்வொருவரின் அரசியல் நோக்கு நிலையும், கண்ணோட்டமும் முற்றிலும் தனிப்பட்ட பார்வையாக உள்ளது. ஆனால் அந்தத் தேர்வு முற்று முழுதாக தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தர்க ரீதியாக செய்ய வேண்டிய ஒன்று.

அதாவது, அந்த காலத்திலிருந்து உங்கள் முழு தலைமுறையும் பரம்பரையாக வாக்களித்தமைக்காக, உங்களுக்கு வேலை கிடைத்ததற்காக, ஊரின் பாதையை அமைத்ததற்காக, அல்லது குறுகிய அரசியல் அனுகூலங்களுக்காக நீங்கள் வாக்களிக்கும் கட்சியை அல்லது நபரை தீர்மானிக்க வேண்டாம்.

 

02. (Update) அப்டேட் ஆகுங்கள்

இங்கு கூறப்படுவது நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் நீங்கள் ஆதரிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சி ஆகிய இரண்டையும் பற்றி முழுமையாக தேடிப் பார்த்து அறிந்திருக்க வேண்டும் என்பதேயாகும்.

அதாவது நீங்கள் தொலைக்காட்சியில் ஒரு செய்தியைப் பார்த்து அல்லது FB இல், Whatsapp இல் ஒரு பதிவைப் பார்த்து அல்ல.

அரசியல் வரலாறு குறித்து பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட புத்தகங்கள், குடியரசு அரசியலமைப்பு, பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகள் மற்றும் அரசியல் உரையாடல்கள் மற்றும் பாராளுமன்ற அமர்வுகளைப் பார்த்து என்ன நடக்கின்றது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தான் உங்கள் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தம்.

 

03. ஒரு சமநிலையான அறிக்கை

நீங்கள் விரும்பும் ஒரு வேட்பாளர் மேடையில் எழுந்து அல்லது தொலைக்காட்சியில் சத்தமாக கத்தி, சில பல வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டால் போதும், “அட…அட… இவர் தான் அந்த ஆள் தலைவா…” என்று முடிவெடுப்பது தான் மிகவும் அசிங்கமான கேவலமான பழக்கமாகும்.

இலங்கை, இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இது காலங்காலமாக காணப்படும் பொதுவான விடயமாக காணப்படுகின்றது.

ஆனால் வெளிநாடுகளில் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையே பகிரங்க விவாதங்கள் நடத்தப்பட்டு அவர்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கொள்கை அறிக்கைகள், தேர்தல் அறிக்கைகள் என்று உள்ளது என்பது பலருக்குத் தெரியாது என்றாலும். அல்லது தெரிந்தும் அவை அவசியமில்லை என்று இருந்தாலும். முக்கிய வேட்பாளர்களில் பொருளாதார, சுகாதார, கல்வி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் போன்ற அனைத்து அம்சங்களிலிருந்தும் சமநிலையான, நடைமுறை சாத்தியமான வரவேற்கத்தற்க கொள்கை அறிக்கையை முன்வைப்பார்கள் யார் என்பதை நீங்கள் தேடிப் பார்து அறிந்திருக்க வேண்டும்.

 

04. குறைவான அளவு மோசமான ‘அது’

ஒரு நாட்டிற்குத் தேவையான சிறந்த அரசியல்வாதிகளை நியமிப்பது என்பது உண்மையில் வாக்காளர்களாகிய நம் மீது சாட்டப்பட்டுள்ள பெரிய பொறுப்பாகும்.

ஆனால் இங்கு கூற வருவது கெட்ட விடயங்கள் குறைவானவரைத் தேர்ந்தெடுங்கள் என்றல்ல. அது ஏதோ துர்நாற்றம் குறைந்த குப்பைகளை வீட்டிற்குள் கொண்டு வருவது போல் செயலாக இருக்கும்.

சிலர் அடிக்கடி சொல்லும் விடயம் தான் தவறுகள் செய்தாலும் திருடினாலும் வேலைகளும் செய்திருக்கிறார் தானே என்று. நாம் இப்படி தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறிந்தும் தெரிந்தும் இருக்கும் காலம் வரை அரசியல்வாதிகள் என்றால் திருந்தப் போவதில்லை.

அதாவது ஒரு கூற்றும் காணப்படுகின்றதே, “அடக்குமுறையாளரின் சக்தி எப்போதும் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் சக்தியை உணர்ந்துகொள்ளும் வரை மட்டும் தான்” என்று.

 

05. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு

முன்பே சொன்னது போல், அரசியலைப் பற்றி ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தும் நிலைப்பாடும் உண்டு. அவருக்கு பிடித்த ஒரு கட்சி, அவர் அதிகம் விரும்பும் ஒரு அரசியல்வாதி இருப்பார்.

ஆனால் அப்படி தான் என்று அந்த அரசியல்வாதி செய்யும் தவறுகளை தவறு என்று கண்டு அதை விமர்சிப்பதற்கும் நல்ல விடயங்களை பாராட்டுவதற்கும் இருமுறை யோசிக்காதீர்கள். அதேபோல், நீங்கள் ஆதரிக்காத அரசியல்வாதிகளின் நல்ல வேலை திட்டங்களை பாராட்டவும் தயங்காதீர்கள்.

அதை விடுத்து தனது ஆள் என்ன தவறு செய்தாலும் அது சரியானது தான் என்று முடியை பிச்சிகிட்டு வாதங்களை முன்வைபதால் அது நாட்டுக்கும் சமூகத்துக்கும் கேலிக்கூத்தாக மாறிவிடும்.

அடுத்து, நாம் அதைச் செய்யாத வரை, அரசியல்வாதிகள் தவறான செயலைச் செய்வதற்கு இருமுறை யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால், தாம் என்ன தவறு, குற்றம் செய்தாலும், அவர்களுக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

 

06. அரசியல் லேபள்கள்

இன்றைய காலத்தில் தனக்கு அரசியலைப் பற்றி டொப் லெவலில் தெரியும் என்று நினைத்துக் கொண்டு திரியும் நபர்களிடம் காணப்படும் மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்று.

இப்போது நாம் சொல்லி விட்டோம் அல்லவா அரசியலென்பது முற்று முழுதாக ஒருவருடைய தனிப்பட்ட உரிமை என்று. அதை பொதுத் தளத்தில் சொல்வதா இல்லையா என்பதும் உங்களது விருப்பம்.

ஆனால் அவ்வாறு பொதுவெளியில் தமது அரசியல் கருத்தைச் சொல்ல விரும்பாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அவ்வாறு தமது அரசியலின் நிலைப்பாட்டை நேரடியாக முன்வைக்காமல், வௌிப்படுத்தாமல் அரசியலைப் பற்றி பேசும் ஏனையவர்களுக்கு வண்ண வண்ண லேபிள்களை ஒட்டுவது என்பது மற்றவர்களின் ஆடைக்குள் நுழைந்து அவர்களின் உள்ளாடைகளின் நிறத்தை தேடுவது போன்று அசிங்மான செயலாகும்.

அந்த நபர் உங்கள் கருத்தை விட வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார் என்று கூறி அவர் அந்தக் கட்சியை சேர்ந்தவர் என்று தீர்மானிப்பதற்கும், முடிவெடுப்பதற்கும் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

07. மிதக்கும் வாக்காளர்கள் (Floating voters)

இப்படி ஒரு கூட்டமும் அனைத்து நாடுகளிலும் இருக்கிறார்கள். அது போல் அது ஒரு நல்ல போக்காக டிரென்டாகவும் உள்ளது.

அதாவது இவர்களுக்கு என்று நிலையான அரசியல் கட்சிகள் ஏதும் இல்லை. நாட்டின் காலத்தின் தேவைக்கேற்ப கால சூழ்நிலைகளுக்கு அமைய, இவர்கள் காலத்திற்கு காலம் தாம் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்கள்.

இப்போது இவ்வாறு மிதக்கும் வாக்காளர்கள் என்ற பட்டியலில் இருப்பவர்களுக்கு இருக்கும் பெரும் தலைவலி தான் நிலையான அதாவது வெட்டினாலும் நாங்கள் இந்தக் கட்சி, இவர் தான் எமது தலைவர் என்று இருப்பவர்களால் வரும் தொல்லைகள்.

இவ்வாறு வேறு நிலைப்பாட்டிற்கு மாறியதுடன் இவர்கள் முன்னாள் ஆட்சியாளர்கள் செய்த தவறுகள் மற்றுமன்றி நல்லவற்றையும் மறந்து விட்ட நன்றி கெட்ட கூட்டம் என அவர்கள் நினைக்கின்றார்கள்.

ஏதேனும் ஒரு காரணத்திற்காக தற்போதுள்ள சிஸ்டத்தை நடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துள்ளார்கள் என்றால் அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பதை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் அவர்களை சுற்றி வளைத்து தாக்கமலாவது இருங்கள்.

அதற்கு பதிலாக நீங்க் ஆதரவளிக்கும் அரசியல்க் கட்சியின் பிரச்சாரத்தை நல்ல முறையில் செய்து அந்த மிதக்கும் வாக்காளர்களின் கருத்தை, நிலைப்பாட்டை சரியான முறையில், நியாயமான வழியில் தோல்வியடையச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

SARINIGAR

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!