ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம், புகுயோகாவின் தென்மேற்கு மாகாணத்தில் மின்சார கார், வாகனங்களுக்கான பேட்டரி ஆலையை உருவாக்கவும், ஆடம்பர லெக்சஸ் பிராண்ட் கார்களை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு அதன் பேட்டரிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று நிக்கேய் வணிக நாளிதழ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
டொயோட்டா செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது பற்றி கூறுகையில், இந்த அறிக்கையில குறிப்பிட்டுள்ள படி டொயோட்டா தனது EV பேட்டரி உற்பத்தி திறனை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது,
Toyota அதன் துணை நிறுவனமான Toyota Motor Kyushu இன் Miyata ஆலையில் Lexus வாகனங்களை உருவாக்குகிறது. அதன் EV-ஃபோகஸ்டு யூனிட் BEV ஃபேக்டரி மூலம் உற்பத்தி செய்யப்படும் அடுத்த தலைமுறை பேட்டரிகளைப் பயன்படுத்தும் EVகளை 2026 முதல் உலகளவில் அறிமுகப்படுத்தப் போவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.