பொருட்களை வாங்கத் தூண்டும் விளம்பர தந்திரங்கள் 7

பொருட்களை வாங்கத் தூண்டும் விளம்பர தந்திரங்கள் 7
தொலைக்காட்சியில், பத்திரிகைள் மற்றும் சஞ்சிகைகளில், இணையத்தில் காணும், வானொலியில் கேட்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பிரச்சாரங்கள், நாம் கடைக்குச் சென்றால் புரமோஷன் என்று காண்பிக்கப்படும் அனைத்தும் எம்மை ஏதாவது பொருட்களை அல்லது சேவையை எடுப்பதற்கு தூண்டும் அனைத்தும் வியாபார விளம்பரங்களாகும்.

ஆனால் இந்த விளம்பரங்களை பொதுவாக எடுத்துக்கொண்டால் தப்பேதும் இல்லை. இப்போது நாம் ஒரு டிவி வாங்க நினைக்கும் போது, ​​விளம்பரங்களைப் பார்த்து, நமக்கான சிறந்த டிவியைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில்லையா? விளம்பரங்களபை் பார்து ஏதாவது ஒரு பொருளைப் பற்றி அறிந்து தெரிந்து பொருட்களை வாங்கியில்லையா? எனவே விளம்பரம்கள் என்பது மோசமானது என்று நாங்கள் கூறவில்லை.

ஆனால் அந்த விளம்பரங்கள் மூலம் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ளும் இடங்களும் உண்டு. அந்த இடத்தில் வியாபார விளம்பரங்கள் கெட்டதாக மாறலாம்.

ஆனால் எந்தெந்த இடங்களில் இந்த வியாபார விளம்பர தந்திரங்களில் நாம் சிக்கிக் கொள்கின்றோம் என்று தெரிந்து கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனவே, எங்களை வலையில் சிக்க வைக்கும் விளம்பர யுக்திகளை தெரிந்து, இதுபோன்ற விளம்பரதாரர்களிடமிருந்து நீங்கள் விரும்பும் அவசியமான பொருட்களை வாங்கழாம். வாருங்கள், அதற்காகத்தான் இந்தக் கட்டுரை!


1. எப்போதும் இல்லை, எல்லா இடங்களிலும் இல்லை!

இது மிகவும் பிரபலமான ஒரு யுக்தியாகும். பெட்டாவில் தரையில் துணிகளை விற்கும் அண்ணன்மார் முதல் ஆன்லைனில் சிறப்பு தள்ளுபடி தருவதாக பேசும் நிறுவனங்கள் வரை இந்த முறை பின்பற்றப்படுகிறது.

குறிப்பிட்ட பொருள் அல்லது சேவை முடிவடையும் தருவாயில் உள்ளது என்பதைக் காட்டுவது இதன் யுக்தியாகும். இப்போது, ​​தள்ளுபடிக்காக எதையாவது கொடுப்பதை விட தள்ளுபடி டிஸ்கவ்ன்ட் இன்னும் நான்கு மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என கூறும் போது அதிகமான மக்கள் அதை வாங்க முற்படுகிறார்கள்.

இந்த லாஜிக்கின் அடிப்படையில் தான் தினசரி டீல் (டெய்லி டீல்) என்று தினசரி டீல் தளங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இந்த பொருள் கிடைக்கும் என்று காட்டுகின்றன.

ஆனால் இரண்டு நாட்களில் முடிந்துவிடும் என்று சொல்லும் அந்த டீல் விளம்பரம், மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டு நாட்கள் என்று காட்டும், ஸ்டாக் தீர்ந்துவிடப் போகிறது உடனடியாக வாங்குங்கள் எனக் காட்டும்!

 

2. இதில் இவ்வளவு விற்பனையாகியுள்ளது

 

உதாரணத்திற்கு இப்போதெல்லாம் புத்தகங்கள் விற்கப்படும்போது வௌியீட்டாளர்கள் கையாளும் ஒரு யுக்திதான் புத்தகத்தின் இத்தனை பிரதிகள் விற்கப்பட்டுவிட்டன, புத்தகத்தின் பத்தாவது பதிப்பும் முடிந்து விடும் தருவாயில் உள்ளது போன்ற வாசங்களை பரப்பிவிடுவது.

இங்கு பயன்படுத்தப்படுவது சிறியதொரு மைன்ட் ட்ரிக் தான், பத்தாயிரம் பிரதிகள் விற்ற புத்தகம் என்று சொல்லும் போது நாம் அந்த புத்தகம் நன்றாக இருக்கம் என்று நினைக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டு நாம் பத்தாயிரத்தி ஒன்றாவது பிரதியை வாங்குவதற்கு ஓடுகின்றோம். ஒரு நல்ல புத்தகம் என்றால் சட சடவென் விற்பனையாகும் என்பதில் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

ஆனால், சில வௌியீட்டாளர்கள் அவ்வளவு விற்பனையாகி விட்டது, இவ்வளவு விற்பனையாகி விட்டது என தவறான, பொய்யான மதிப்பீடுகளைக் கொடுப்பதுதான் பிரச்சனை.

இது போல் தான் குறிப்பிட்ட டீவி நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் பார்வையாளர்கள் எனக் கூறுவது, குறிப்பிட்ட படம் இத்தனை கோடி வசூல், வசூலில் சாதனை என்றெல்லாம் உருட்டி விடுவது இந்நதக் கோட்பாட்டின் கீழ் தான்.

 

3. தொல்லையாக வந்து நிற்கும் விளம்பரங்கள்

இதுவும் ஒரு பிரபலமான விளம்பர யுக்தியாகும். அது தான் எம்மை தொல்லை படுத்தியாவது குறிப்பிட்ட விளம்பரத்தை காண்பிக்க வைப்பது.

நாளிதழ் வாங்கி படிக்கும் போது அதனுள் இருந்து கீழே விழும் துண்டுப் பிரசுரமும் அப்படித்தான். நாமும் இனி என்னதான் தொல்லையாக இருந்தாலும் கீழே விழுந்த துண்டுப் பிரசுரத்தை மீண்டும் கையிலெடுத்து அதை படிப்போம்.

அத்துடன் ஒரு இணையத் தளத்திற்குச் செல்லும்போது தோன்றும் (பொப் அப்) விளம்பரங்கள், யூடியூப்பில் வீடியோவின் நடுவில் தோன்றும் விளம்பரங்களும் இஇந்த வகையைச் சேர்ந்தவை தான்.

ஆனால் இந்த தொல்லை விளம்பரங்களைச் செய்தவர்களின் பரம்பரையையே திட்டிவிட்டு குறிப்பிட்ட விளம்பரத்தை மூடிவிட்டாலும் அந்த விளம்பரம் நம் நினைவில் நிற்கும்.

4. இது நீங்கள் கண்டிப்பாக வாங்க வேண்டியதொன்று!

சில பொருட்கள் உள்ளன, உண்மையில் அவை நமக்கு வேண்டுமா என்று கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் அதை வாங்குகின்றோம்.

சில உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளன. உண்மையில் அவைகளினால் எங்களுக்கு எந்தவித பலனோ, நன்மையோ கிடைக்கப் போவதில்லை. சுருக்கமாக சொன்னால் அதை காசு கொடுத்து வாங்கி சாப்பிடவில்லை எனின் அதனால் எமக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை.

ஆனால் நாம் அவற்றை வாங்குகிறோம், சாப்பிடுகிறோம், குடிக்கிறோம். ஏன்? விளம்பரங்கள் மூலம், நம் வாழ்வில் அவை தேவை என்பதை நம் மனதில் பதிய வைத்துள்ளது.

இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனென்றால், இது எமது வாழ்கைக்கு தேவை, இது எமக்கு இன்றியமையாதது என நம் மனதில் பதியப்படுத்தி நமக்கு விற்கப்படும் சில பொருட்கள் எமது வாழ்கைக்கு அநாவசியமாதாகவும், ஆபத்தானதாகவும் அமையலாம்.

 

5. வாங்குதற்கே தான் தோன்றுகின்றதா?

 

அந்த (சூப்பர் மார்க்கெட்) பல்பொருள் அங்காடிகள் உண்மையில் நமக்கு மிகப் பெரிய வசதியைத் தரும் இடங்கள் அல்லவா? ஏன், வீட்டிற்கு தேவையான அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளும் வகையில் சூப்பர் மார்க்கெட்டுகள் கட்டப்பட்டுள்ளன.

சூப்பர் மார்க்கெட்டுகளால் பரவலாகக் காணப்படும் சிறிய கடைகளுக்கு பாதிப்பா என்பது உண்மையில் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

எப்படியோ, ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழையும் ஒருவர், சாதாரணமாக அறிவுள்ள வாடிக்கையாளராக இல்லாவிட்டால், சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வௌ்யே வருவது வேண்டியது, வேண்டாதது என அனைத்தையும் அள்ளிக் கட்டிக் கொண்டுதான்.

ஏனெனில், சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை காட்சிப் படுத்தப்பட்டு வைத்திருப்பதே மக்களை வாங்கத் தூண்டும் விதத்தில் தான். எப்படியிருந்தாலும், பெரிய தள்ளுவண்டியைத் தள்ளியவாரு, நேர்தியாக அடிக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்குவதும் ஒரு தனி லெவல் தான்.

முன்பெல்லாம் பெற்றோருடன் புத்தகம், ஸ்டேஷனரி கடைக்குச் செல்லும் போது பேனா, பென்சில், அழி ரப்பர் போன்ற தேவையானது, தேவையற்றது என எல்லாவற்றையும் வாங்கத் தோண்றும் மனநிலையைப் போண்றது தான் இதுவும்.

இதிலிருந்து தப்பிக்க எளிதான வழி, வீட்டிற்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே பட்டியலிட்டு, சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று உங்கள் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொருட்களை வாங்குவது.

 

6. இதுவே நமது மனிதநேயம்!

 

இப்போதெல்லாம், நமது மனிதநேயம் மற்றும் கருணையைப் பற்றி பேசும் விளம்பரங்களை நீங்கள் அதிகம் பார்க்க முடியும்.

இவை எவ்வாறான யுக்தி என்றால். உதாரணமாக தாய் தந்தைக்கு பணிவிடை செய்யும் பண்பைப் பற்றி மனதை உருக்கும் விளம்பரத்தில் சொல்லாமல் சொல்லுவார்கள் பெற்றோரைச் சந்திக்கச் செல்லும் போது, ​​குறிப்பிட்ட வகையிலான ஒரு பொருளை தான் பரிசாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று.


உண்மையில் இது போன்ற விளம்பரங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரே விஷயம் தான், அம்மா அப்பாவின் மதிப்பைக் காட்டும் விளம்பரத்தைப் பார்த்து, நாளைக்கே அம்மா, அப்பாவைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற செய்தியைப் பெறுங்கள்.


ஆனால் விளம்பரத்தில் சொல்வதைப் போல் குறிப்பிட்ட பொருளை எடுத்து செல்வதை விடுத்து, உங்கள் அம்மா, அப்பாவுக்கு எது நல்லது, எதை எடுத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். அவ்வளவு தான்.

 

7. இதை வாங்கினால் அது இலவசம்!

உண்மையில், நம் அனைவருக்கும் இலவசமாக பொருள் வாங்கும் நோய் உள்ளது. சும்மா என்றால் வேறென்ன பேச்சி சும்மா தாரங்க என்டா சுத்தியல் என்றாலும் ஓகே தான்.

அதனால் தான் பொருட்களை விற்கும் சில நிறுவனங்கள் இதில் ஒன்றை வாங்கினால் அதில் ஒன்று இலவசமாகக் கிடைக்கும் போன்ற தந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.

இது சரி. ஆனால் பிரச்சனை அதுவல்ல. அந்த இலவசமாக கிடைக்கும் பொருளுக்கு ஆசைப்பட்டு காசு செலவழித்து தேவையற்றதையும் வாங்குவதற்கு முற்படுகின்றோம்.

ஒன்று இலவசமாக கிடைக்கும் அந்தப் பொருளால் நமக்கு எந்தப் பயனுமில்லை, அல்லது இலவசமாக கிடைக்கும் பொருளுக்காக காசு கொடுத்து வாங்கும் பொருளை விட அதே வகையான தரமான மலிவான விலையில் வேறு பொருட்கள் இருக்கும்.

ஆனால் இலவசம் என்று வரும் போது நாம் கண்மூடித் தனமாக பொருட்களை வாங்குகின்றோம். அதனால் இவ்வாறான சூழ் நிலையில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன..

இலசமாக தருவது நமக்கு அவசியமா? இலவசத்துடன் விற்கப்படும் பொருளும் நமக்கு அவசியமா? இவைகளை எடுப்பதை விட இதே பொருட்களை சந்தையில் இதை விட மலிவான விலையில் உள்ளதா? இலவசமாக தரும் பொருளின் தரம் எப்படி? போண்ற விடயங்களைப் பற்றி சற்று சிந்தித்து பொருட்களை வாங்குவதைப் பற்றி முடிவெடுப்பது சிறந்தது.

இறுதியாக, நாம் மீண்டும் சொல்கிறோம். நாம் இங்கு சொல்ல விரும்புவது விளம்பரம் மோசமானது தவறானது என்பதல்ல . நீங்கள் எப்பொழுதும் புத்திசாலியான வாடிக்கையாளராக இருக்க வேண்டும். விளம்பரங்களை நமக்குச் சாதகமாக மாற்றி, நமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கலாம்!

Leave a Reply

error: Content is protected !!