புதிய Iphone 16 மாடல்கள் வௌியிடப்பட்டுள்ளது

iphone 16கடந்த சில நாட்களாக உலகின் முக்கிய பேச்சுப் பொருளாக காணப்பட்ட Iphone 16 ஸ்மார்ட்போன்களின் புதிய தொடர் கடந்த (09) சந்தையில் வெளியிடப்பட்டது. கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் அமைந்துள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இதன் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஐபோன் புதிய சிறப்பம்சங்களுடன் வௌியிடப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய நான்கு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன் 16 செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட முதல் ஐபோன் மாடல் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் புதிய ஐபோன்கள் அனைத்தும் அதன் பழைய மாடல்களை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

iPhone 16 

நினைவகம் (Memory) – 128GB, 256GB, மற்றும் 512GB
திரை அளவு (Display) 6.1
A18 புரொசஸர் மற்றும் IOS 18 இயங்குதளம் இதில் இடம்பெற்றுள்ளது.
48 MP பிரதான பின்பக்க கெமரா, 12 MP அல்ட்ரா வைட் கெமரா மற்றும் 12 MP முன்பக்க கெமரா
Type C சார்ஜிங் போர்ட்
அக்‌ஷன் மற்றும் கெமரா கன்ட்ரோல் பட்டன்
ஐந்து நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது பிளாக், பிங்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் வயிட்
விலை $799


iPhone 16 Plus 

நினைவகம் (Memory) – 128GB, 256GB, மற்றும் 512GB
திரை அளவு (Display) – 6.7
A18 புரொசஸர் மற்றும் IOS 18 இயங்குதளம் இதில் இடம்பெற்றுள்ளது.
48 MP பிரதான பின்புற கெமரா, 12 MP அல்ட்ரா வைட் கெமரா மற்றும் 12 MP முன்பக்க கெமரா
Type C சார்ஜிங் போர்ட்
அக்‌ஷன் மற்றும் கெமரா கன்ட்ரோல் பட்டன்
ஐந்து நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது பிளாக், பிங்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் ஒயிட்
விலை $ 999


iPhone 16 Pro 

நினைவகம் (Memory) – 128GB, 256GB, 512GB, மற்றும் 1TB
A18 PRO சிப்
திரை அளவு (Display) – 6.3
48 MP பிரதான கெமரா, 48 MP அல்ட்ரா வைட் கெமரா, மற்றும் 12 MP முன்பக்க கெமரா
கெமரா கன்ட்ரோல் பட்டன்
நான்கு நிறங்களில் வௌியிடப்பட்டுள்ளது பிளாக் டைட்டானியம், டெஸெர்ட் டைட்டானியம்,நேச்சுரல் டைட்டானியம் மற்றும் ஒயிட் டைட்டானியம்
விலை $ 999


iPhone 16 Pro Max 

நினைவகம் (Memory) – 256GB, 512GB, மற்றும் 1TB
திரை அளவு (Display) – 6.9
48 MP பிரதான கெமரா, 48 MP அல்ட்ரா வைட் கெமரா, மற்றும் 12 MP முன்பக்க கெமரா
கெமரா கன்ட்ரோல் பட்டன்
நான்கு நிறங்களில் வௌியிடப்பட்டுள்ளது பிளாக் டைட்டானியம், டெஸெர்ட் டைட்டானியம்,நேச்சுரல் டைட்டானியம் மற்றும் ஒயிட் டைட்டானியம்
விலை $1,199


Apple debuts iPhone 16 Pro & iPhone 16 Pro Max

அமெரிக்க ஸ்மார்ட் போன் சந்தையில் ஐபோன்கள் 52% விற்பனையை கொண்டுள்ளது.

 

 

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!