கூகுள் பிக்சல் அதன் புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது

உலகம் முழுவதையும் கலக்கிய கூகுள் பிக்சல் அதன் புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியதுகூகுள் நிறுவனம் (கூகுள் பிக்சல்) Pixel Smart Phoneளின் செயற்கை நுண்ணறிவு AI உள்ளடக்கத்தின் பல மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஒரு நிகழ்வின் போது கூகுள் நிறுவனம் இந்த தொலைபேசிகளை காட்சிப்படுத்தியது.

செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் தேடல் (Screenshot search) மற்றும் தொலைபேசிகளுக்கான Gemini chatbot  போன்ற புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, Google Pixel 9 தொலைபேசி மாடல் 6.3 அங்குல திரையை கொண்டுள்ளதுடன், அதன் விலை $799 இலிருந்து தொடங்குகிறது.

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது இந்த போனின் விலையை 100 டாலர்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் கூறுகிறது.

Google Pixel 9 Pro XL தொலைபேசியானது 6.8 அங்குல திரையைக் கொண்டுள்ளதுடன் இந்த மாதம் சந்தையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கக்கூடிய Google Pixel 9 Pro மற்றும் Google Pixel 9 Pro Fold  போன்களை அடுத்த மாதம் சந்தையில் வெளியிடத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கூகுள் பிக்சல் 9 போன் மாடல் திரை என்பது OLED  தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட அம்சத் திரையாகும், மேலும் இந்த போனில் கூகுள் உருவாக்கிய புதிய (processor) செயலி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar website. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!