ஓட்டைப் பை !

ஓட்டைப் பைஓட்டைப் பை !

• விலைகள் உயர்ந்து விட்டது..
• பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்..
• மஸ்ஜித்கள் காலியாகி பாழாகி விட்டது..
• அல்லாஹ் ﷻ வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப் பட்டுவிட்டது..
• திருடர்கள் நியாயம் பேசுகின்றார்கள்..
• முஜாஹித்கள் வழிநடத்தலில் கீழ் அநியாயம் செய்கின்றார்கள்..
• விபச்சாரம் என்பது ஹலாலாக்கப் பட்டு விட்டது..
• திருமணம் முடிப்பது என்பது இயலாத ஒன்றாக மாறி விட்டது..
• ஆண்களை நிர்வகிப்பவர்களாக பெண்கள் மாறி விட்டார்கள்..
• முஸ்லிம்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது..
• ஏழை எளியவர்கள் குடையின்றி மழையில் தவிக்கின்றனர்.

இறுதி நாளுக்கான பெரிய அடையாளங்களில் இன்னும் கொஞ்சம் தான் எஞ்சியியுள்ளது. எனவே துரிதமாக தௌபா செய்து பாவமன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள். ஓட்டைப் பைகளில் உங்கள் நன்மைகளை நிரப்புவதை விட்டும் தவிர்த்து கொள்ளுங்கள்.

• அழகாக வுழு செய்கின்றீர்கள்.
ஆனால்……
தண்ணீரை வீண் விரயம் செய்கின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• ஏழைகளுக்கு உதவி செய்கின்றீர்கள்.
ஆனால்…….
அவர்களை இழிவுபடுத்தி ஏளனப் படுத்துகின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கி இறைவனை வழிப்படுகின்றீர்கள்.
ஆனால்…
குடும்ப உறவுகளைத் துண்டித்து வாழ்கின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• நோன்பு நோற்று பசி தாகத்துடன் பொறுமையாளராக இருக்கின்றீர்கள்.
ஆனால்…
பிறரை ஏசி, திட்டி சபிக்கின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• உடம்பை மறைத்து அபாயாக்களால் போர்த்துகின்றீர்கள்.
ஆனால்…
அதனையும் தாண்டி நறுமணம் கமழ்கிறது, அலங்காரம் கண்னைப் பறிக்கின்றது.
“ஓட்டைப் பை”

• விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கின்றீர்கள்.
ஆனால்…
அவர்கள் சென்ற பின்னர் அவர்களைப் பற்றி குறைகளைக் கூறி புறம் பேசுகின்றீர்கள்
“ஓட்டைப் பை”

இறுதியாக கூறுகிறேன் … ஓட்டைப் பைகளில் உங்களது நன்மைகளை நிரப்ப வேண்டாம். ஏன் எனில், சிரமப்பட்டு நீங்கள் நன்மைகளை சேகரிக்க, மறு புறத்தால் அவைகள் இலேசாக விழுந்து விடும்.

ஆச்சரியம்…

• ஹஜ், உம்றா கடமையை செய்ய முடியாது. காரணம் அதன் செலவுகள் அதிகமாம்.
ஆனால்… நல்ல சீசனைப் பார்த்து உள்நாட்டிலும், வெளி நாடுகளுக்கும் உல்லாச சுற்றுலா செல்ல முடிகின்றது.

• உழ்ஹிய்யா குர்பான் கொடுக்க முடியாது. காரணம் அதன் விலை அதிகம்.
ஆனால்… அதிக விலை கூடிய ஐ போன், மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.

• தினமும் சமூகத் தளங்களில் நூறு செய்திகளை வாசித்து, கண்டதையும் பகிர முடியும்.
ஆனால்… குர்ஆனில் பத்து ஆயத்துக்களை ஓதுவதற்கு நேரமில்லை, நல்லதை பகிருவதற்கும் பக்குவமில்லை.

இறைவா…….!
எனக்கும், எனது சகோதர்களுக்கும் மன்னிப்பையும், நேரான நல் வழியையும் தந்தருள்வாயாக……! ஆமீன்!

தமிழாக்கம் :
மௌலவி இக்ராம் தீனி
உஸ்தாத் தாருல் உலூம் அல் புர்கானிய்யா அரபுக் கல்லூரி.
கண்டி.

 

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!