சந்தையில் விற்பனையில் உள்ள தயாரிப்புகள், பொருட்களை ஸ்கேன் செய்து அந்த தயாரிப்பு இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களா அல்லது இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்களா என்பதை கண்டறியும் No Thanks “நோ தேங்க்ஸ்” என்ற புதிய மொபைல் App பயன்பாடு டிஜிட்டல் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.
இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்களை மக்கள் புறக்கணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரபலமான மொபைல் போன் செயலியை கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிய சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நோ தேங்க்ஸ் பயன்பாடு பயனர்கள் தயாரிப்புகளின் பார்கோடுகளை ஸ்கேன் செய்யது அந்த தயாரிப்பு நிறுவனம் இஸ்ரேலுக்கு ஆதரவானதா என்பதை அறிய உதவுகின்றது.
நவம்பர் 13ம் திகதி தொடங்கப்பட்ட “நோ தேங்க்ஸ்” நவம்பர் 30ம் திகதி பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு 100,000 ற்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.
“உங்கள் கையில் உள்ள தயாரிப்பு பாலஸ்தீனத்தில் குழந்தைகளைக் கொல்வதை ஆதரிக்கிறதா இல்லையா என்பதை இங்கே நீங்கள் காணலாம்.” என “நோ தேங்க்ஸ்” செயலியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நோ தேங்க்ஸ் படி, ஆப்பிள் தயாரிப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் தற்போது மதிப்பாய்வில் உள்ளது.
பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனங்களின் தயாரிப்புகளை இன, மத, மொழி பேதமின்றி அனைத்து மக்களும் புறக்கணிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அவ்வாறான பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக இஸ்ரேல் உற்பட பல்வேறு மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறன நிலையில் இஸ்ரேலை ஆதரிக்கும் தயாரிப்புகளுக்கு எதிராக பல நாடுகள் புறக்கணிப்புக்கு தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருகின்றன.