இலங்கையின் ஜனாதிபதி என்பவர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரச தலைவரும் அரசாங்கத்தின் தலைவருமாவார். இலங்கையின் மிக முக்கியமான அரசியல் பிரமுகராக ஜனாதிபதி காணப்படுகின்றார்.
இலங்கையின் ஜனாதிபதி பதவி 1972 இல் நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜே.ஆர். ஜெயவர்தனவினால் முன்வைக்கப்பட்ட 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் வாயிலாக இந்த பதவிக்கு சகல அதிகாரங்களும் உள்ளடங்கிய நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமை சேர்க்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதி – வில்லியம் கோபல்லவ
- பதவிக்காலம் | 22 மே 1972 – 4 பெப்ரவரி 1978 (5 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்)
- 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் இலங்கை என மாற்றப்பட்ட போது அவர் இலங்கையின் கடைசி பிரதமராகவும் அதன் முதலாவது (நிறைவேற்று அதிகாரமற்ற) ஜனாதிபதியாகவும் பணியாற்றினார்.
மேலதிக தகவல்களுக்கு –
வில்லியம் கோபல்லவ – இலங்கையின் முதலாவது ஜனாதிபதி
முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – ஜே.ஆர். ஜெயவர்தன
- பதவிக்காலம் | 4 பெப்ரவரி 1978 – 2 ஜனவரி 1989 (10 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 29 நாட்கள்)
- அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
- 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு அவர் இலங்கை ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்றார்.
மேலதிக தகவல்களுக்கு –
ஜே.ஆர். ஜெயவர்தன – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 1வது ஜனாதிபதி
இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – ரணசிங்க பிரேமதாச
- பதவிக்காலம் | 2 ஜனவரி 1989 – 1 மே 1993 (4 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்)
- அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
- அவர் மே தினக் கூட்டமொன்றில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.
மேலதிக தகவல்களுக்கு –
ரணசிங்க பிரேமதாச – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 2வது ஜனாதிபதி
மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – டி.பி. விஜேதுங்க
- பதவிக்காலம் | மே 1, 1993 – நவம்பர் 12, 1994
- அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
- ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையைத் தொடர்ந்து அரசியலமைப்பு ரீதியாக டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
மேலதிக தகவல்களுக்கு –
டி.பி விஜேதுங்க – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 3வது ஜனாதிபதி
நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – சந்திரிகா குமாரதுங்க
- பதவிக்காலம் | (12 நவம்பர் 1994 – 19 நவம்பர் 2005)
- அரசியற் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி
- 1994 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார்.
மேலதிக தகவல்களுக்கு –
சந்திரிகா குமாரதுங்க – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 4வது ஜனாதிபதி
ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – மஹிந்த ராஜபக்ஷ
- பதவிக்காலம் | 2005 நவம்பர் 19 முதல் 2015 ஜனவரி 9
- அரசியற் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி
- சுமார் மூன்று தசாப்த காலம் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை தன் ஆட்சிக் காலத்தில் இரானுவ ரீதியாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.
மேலதிக தகவல்களுக்கு –
மகிந்த ராஜபக்ஷ – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 5வது ஜனாதிபதி
ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – மைத்திரிபால சிறிசேன
- பதவிக்காலம் | 9 ஜனவரி 2015 – 18 நவம்பர் 2019
- அரசியற் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி
- 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இன்னும் பல கட்சிகள், இயக்கங்களின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலதிக தகவல்களுக்கு –
மைத்திரிபால சிறிசேன – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 6வது ஜனாதிபதி
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – கோட்டாபய ராஜபக்ஷ
- பதவிக்காலம் | 18 நவம்பர் 2019 – 14 ஜூலை 2022
- அரசியற் கட்சி | ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
- உலகளாவிய கோவிட் -19 தொற்றுநோயுடன் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகியதால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி க்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் வெடித்தன, இதன் விளைவாக கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிப் பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வௌியேறினார்.
மேலதிக தகவல்களுக்கு –
கோட்டாபய ராஜபக்ஷ – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 7வது ஜனாதிபதி
எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – ரணில் விக்கிரமசிங்க
- பதவிக்காலம் | 21 ஜூலை 2022 முதல் – 22 செப்டம்பர் 2024 வரை
- அரசியற் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி
- கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு சென்றதன் பின்னர் அரசியலமைப்பின் படி பாராளமன்ற உறுப்பினர்களின் பெருன்பான்மை ஆதரவைப் பெற்று ஜனாதிபதியானார்.
- 2024ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் இடம் பெற்று தோல்வியடைந்ததை தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் 22 திகதி தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
மேலதிக தகவல்களுக்கு –
ரணில் விக்கிரமசிங்க – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 8வது ஜனாதிபதி
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – அநுர குமார திஸாநாயக
- பதவிக்காலம் | 23 செப்டம்பர 2024 முதல் –
- அரசியற் கட்சி | தேசிய மக்கள் சக்தி
- 2024ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அநுர குமார திஸாநாயக ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
மேலதிக தகவல்களுக்கு –
அநுர குமார – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 9வது ஜனாதிபதி
SARINIGAR
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!