இணையத்தள குற்றங்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது எப்படி?

இணையத்தள
இணையத்தள குற்றங்கள் ! தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கைக்கு வந்துள்ளது. இணையத்தல பயன்பாட்டினால் எந்தளவு நன்மைகள் காணப்படுகின்றதோ அந்தளவிற்கு தீமைகளும் காணப்படுகின்றது.
இன்று பாடசாலை மாணவர்கள் கூட மடிக்கணினி, மொபைல் போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான விடயங்களை இணையத்தின் மூலம் மாணவர்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றப்படுபடுபவர்களும் உள்ளனர். நாள் தோறும் சைபர் குற்றம்கள் எனப்படும் இணையதள வாயிலான குற்றங்கள் அதிகமாகி வருகின்றது.
எனவே கண்களால் பார்க்க முடியாத இவ்வாறன இணையத்தளத்தில் வலம்வரும் எதிரிகளிடமிருந்து எம் குழந்தைகளை பாதுகாப்பதும் நமது கடமையாக மாறிவிட்டது.
கருத்துக் கணிப்புகளின் படி இணையத்தளத்தை பயன்படுத்தும் பிள்ளைகளில் 62 சதவிகித பிள்ளைகள் பிறரிடம் சாட் செய்யும் போது தமது சொந்த விடயங்களை தெரிவிக்கின்றனராம். இதில் 58 சதவிகிதம் பேர் தங்களின் வீட்டு முகவரியை பரிமாறுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவே இணையத்தளத்தின் சைபர் குற்றவாளிகளுக்கு தமது குற்றங்களை செய்வதற்கு இலகுவான வழியாக அமைகின்றது. எனவே இணையத்தளத்தைப் பயன்படுத்தும் எமது குழந்தைகளை கண்காணிப்பதுடன் அவர்களுக்கு தமது சொந்த விடயங்களையோ, முகவரியையோ யாரிடமும் பரிமாறக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
தினமும் பிள்ளைகளிடம் சில மணிநேரமாவது கதைக்க வேண்டும். இணையத்தளத்தில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபர்களா? நண்பர்களா? அல்லது முகமறியாத புது நபர்களா? என்பதை என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் என்ன விடயங்களைப் பற்றி கதைக்கின்றனர் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகும். அப்பொழுதுதான் இணையத்தள எதிரிகளிடம் இருந்து பிள்ளைகளை பாதுகாக்க முடியும்.
இணையத்தள குற்றங்களில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அது சம்பந்தமான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவது பெற்றோரின் கடமையாகும்.
கணணியை பொதுவாக வீட்டிலுள்ள அனைவருக்கும் காணக்கூடிய ஒரு இடத்தில் வைப்பது சிறந்ததாகும். குறிப்பாக கணினியின் திரை நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம்.
அப்பொழுதுதான் தேவையற்ற இணையத்தளங்கள், குழந்தைகளின் மனதை திசை திருப்பும் படங்கள், போன்றவற்றிலிருந்து நம்மையறியாமல் பிள்ளைகள் தவறான இணையத்தள்கள் பக்கம் செல்ல மாட்டார்கள்.
பெண் பிள்ளைகள் சாட் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறை வழங்க வேண்டும். இன்று பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து ஏமாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளது.
மெயில் அனுப்பும் முறை, பைல்கள், படங்களை பதிவேற்றம் செய்யும் முறை போன்ற விடயங்களை பிள்ளைகளுக்கு விவரம் தெரியும் வரை கற்றுக் கொடுக்காமல் இருப்பது நல்லது.
அத்துடன் மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகள், இணையத்தள பக்களை கவனமாக கையாள தெரிந்து கொள்ள வேண்டும். வைரஸ்களினால் உங்கள் கணணியின் தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைளை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது நடைபெறும் இணையத்தள குற்றங்களில் அதிகமானவை சிறுவர்கள் தரும் விபரங்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
இணையத்தள குற்றங்கள் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்ட “குளோபல் செக்யுரிட்டி சொல்யூசன்ஸ்’ என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையில கூறியிருப்பதாவது:
இணைதளங்கள் வாயிலாக, ஆன்லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் மற்றும் மல்வயார் தாக்குதல், பாலியல் ரீதியான குற்றங்கள், லாட்டரி மோசடிகள், பாஸ்வேர் மற்றும் வங்கி கணக்குகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களிலிருந்து அந்தரங்க விபரங்களை திருடுதல் உள்ளிட்ட இணையத்தள குற்றங்கள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன.
உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் சுமார் 65 சதவீதமானோர் இணையத்தள குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்கத்துக் கொள்ள அவசியான பாதுகாப்பு மென்பொருட்களை பயன்படுத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் பிள்ளையும் பாதுகாக்க முடியும்.

Leave a Reply

error: Content is protected !!