ஆன்லைனில் பாதுகாப்பாக பொருட்களை வாங்குவது எப்படி?

Online-Shoping, ஆன்லைனில் பாதுகாப்பாக பொருட்களை வாங்குவது எப்படி?இன்றைய டிஜிட்டல் உலகில், ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் பொதுவான விடயமாகி வருகின்றது. இருப்பினும், இ-காமர்ஸின் புகழ் அதிகரித்து வருவதுடன் இந்த பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு பற்றிய நிலமைகளும் அதிகரித்துள்ளன.
ஆன்லைனில் பாதுகாப்பாக பொருட்களை வாங்குவது எப்படி என்பது ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முன்பு பலர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வியாக மாறிவிட்டது.

எனினும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது உங்களையும் உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் எடுக்கக் கூடிய நடவடடிக்கைகள் உள்ளன, இந்த கட்டுரையில் அவற்றில் சிலவற்றை நாங்கள் உங்களுக்குக் முன்வைக்க விரும்புகின்றோம்.

ஆன்லைனில் பாதுகாப்பாக பொருட்களை வாங்குவது எப்படி?
❖ பிரசித்திப் பெற்ற மற்றும் நம்பகமான ஷாப்பிங் தளத்தைத் தேர்வு செய்யுங்கள்:

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது, நீங்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் ஆகும். Amazon, eBay போன்ற பிரசித்தமான இணையத்தள ஆன்லைன் கடைகள், அல்லது நன்கு அறியப்பட்ட மற்றும் பிரபலமான நிறுவனங்களின் தனிப்பட்ட வலைத்தளங்களைத் தேர்வு செய்யுங்கள்.

❖ வலைத்தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

ஆன்லைனில எந்தவொரு பொருளையும் கொள்முதல் செய்வதற்கு முன்னர், வலைத்தளம் பாதுகாப்பானதா என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட URL “http://” என்பதற்குப் பதிலாக “https://” உடன் தொடங்குகின்றதா என்பதைச் சரிபார்க்கவும். “https” என்பது நீங்கள் உள்ளிடும் தகவல் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.

❖ ஏனைய வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் படியுங்கள்:

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அந்த பொருளைப் பற்றிய தரவுகளை ஆராய்ந்து ஏனைய வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் படியுங்கள். இது பொருளின் தயாரிப்பு மற்றும் விற்பனையாளரின் தரம் பற்றிய தெளிவை உங்களுக்கு வழங்கும்.

❖ பொறுப்புக் கூறும் கொள்கைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

இணையதளத்தில் காணப்படும் கொடுக்கல்-வாங்கல் பொறுப்புக் கொள்கைகளைப் படித்து புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிய பொருட்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை அல்லது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை அறிய இது உதவும்.

❖ அவசியமில்லாத தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்:

ஆன்லைனில் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, பரிவர்த்தனையை முடிக்க தேவையான தகவலை மட்டுமே வழங்கவும். அவசியமற்ற கூடுதல் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்த்துக் கொள்ளுங்கள்.

❖ வலிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல்:

நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் ஒவ்வொரு இணையதளத்திற்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பிறந்த திகதி அல்லது “123456” போன்ற எளிதில் யூகிக்கக் கூடிய கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

❖ உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை சரிபார்க்கவும்:

அங்கீகரிக்கப்படாத மற்றும் மறைமுக கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் கிரெடிட், டெபிட் கார்டுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யுங்கள். சந்தேகத்திற்கிடமான எதனையாவது நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

❖ உங்கள் மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்:

உங்கள் இயக்க முறைமை, இணைய உலாவி மற்றும் பாதுகாப்பு நிரல்கள் (firewall) புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். புதுப்பித்தல்களில் (updates) பொதுவாக பாதுகாப்பு மேம்பாடுகளும் பிழைத் திருத்தங்களும் அடங்கும்.

❖ பாதுகாப்பான கட்டண வழிமுறைகளை தெரிவு செய்து கொள்ளுங்கள்:

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது, கிரெடிட், டெபிட் கார்டுகள், PayPal அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் கட்டண சேவைகள் போன்ற பாதுகாப்பான கட்டண வழிமுறைகளைப் பயன்படுத்துங்கள். நேரடி வங்கி பரிமாற்றங்கள் அல்லது நேரடியாக உங்கள் வங்கி கணக்கு எண்களை வழங்குவதைத் தவிர்க்கவும்.

❖ உங்கள் கொள்முதல் வரலாறு மற்றும் விற்பனையாளர் தர மதிப்பாய்வை பதிவு செய்யவும்:

ஆன்லைனில் பொருட்களை வாங்கிய பிறகு, உங்கள் கொள்முதல் வரலாறு (purchase history) மற்றும் விற்பனையாளர் தர மதிப்பாய்வுகளை (Review seller rates) பதிவு செய்யவும். இது மற்ற வாடிக்கையாளர்களுக்கு பொருள் மற்றும் விற்பனையாளர் பற்றி தகவலறிந்து முடிவுகளை எடுப்பதற்கும், ஆன்லைன் சந்தையின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் உதவுகின்றது.

❂ பாதுகாப்பான ஆன்லைன் கொள்முதல் செய்வதற்கான படிநிலைகள் என்ன?
  1. விற்பனையாளரின் நன்மதிப்பை ஆராயுங்கள் (seller’s reputation).
  2. குறித்த தளம் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (https).
  3. பிற வாடிக்கையாளர்களின் கருத்துகள் மற்றும் மதிப்புரைகளைப் படிக்கவும்.
  4. பின்வாங்கல் கொள்கையை சரிபார்க்கவும் (Check Back Policy).
  5. பாதுகாப்பற்ற தளங்களில் முக்கியமான விபரங்களை பகிர வேண்டாம்.
❂ ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி?
  1. வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்.
  2. உங்கள் கடவுச்சொற்களை யாருடனும் பகிர வேண்டாம்.
  3. பொது கணினிகளில் இரகசிய தகவல்களை பதிவு செய்ய வேண்டாம்.
  4. பாதுகாப்பான இணைய இணைப்பைப் பயன்படுத்தவும் மற்றும் பொதுவான Wi-Fi (Public Wi-Fi) நெட்வொர்க்குகளைத் தவிர்க்கவும்.
  5. உங்கள் மென்பொருள் (softwares) மற்றும் வைரஸ்தடுப்பு (Virus Gurd) தவறாமல் புதுப்பிக்கவும்.
❂ ஆன்லைனில் பணம் செலுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியது என்ன?
  1. வலைத்தளத்தில் பாதுகாப்பு சான்றிதழ்கள் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
  2. பாதுகாப்பான கட்டண வழி முறைகளைப் பயன்படுத்தவும்.
  3. பாதுகாப்பற்ற களங்களில் தகவல்களைச் பதிவு செய்வதை தவிர்க்கவும்.
  4. உங்கள் கட்டண விவரங்களை மின்னஞ்சல் மூலம் யாருடனும் பகிர வேண்டாம்.
  5. உங்கள் கணக்கு அறிக்கைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும்.
❂ ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்தைப் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் என்ன?
  1. குறித்த தளத்திற்கு சந்தேகத்திற்குரிய அவப் பெயர்கள் காணப்பட்டால்,
  2. அவர்கள் தேவைக்கதிகமான தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றார்ள் என்றால்,
  3. சந்தை விலைகளை விட மிகவும் மலிவான விலைகள் காண்பிக்கப்பட்டிருந்தால்,
  4. பாதுகாப்பான, நம்பகமான கட்டண வழி முறைகளை வழங்கவில்லை என்றால்,
    1. இணையதளத்தில் அவர்களைப் பற்றிய தவகல்கள் மற்றும் தொடர்பு கொள்வதற்கான வழிகள் இல்லை என்றால்,
      குறிப்பிட்ட இனைத்தளத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.
❂ மொபைல் போனில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை என்ன?
  1. நம்பகத்தன்மையற்ற மூலங்களிலிருந்து செயழிகளை நிறுவ வேண்டாம். (Do not install apps from untrusted sources)
  2. குறிப்பிட்ட செயழி அதிகாரப்பூர்வ டெவலப்பரிடமிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  3. குறித்த செயழி மூலம் கோரப்படும் அனுமதிகளை ஆராய்ந்து பார்க்கவும்
  4. செயழிகள் மற்றும் இயக்க முறைமை ஆகிய இரண்டையும் உரிய முறையில் புதுப்பிக்கவும்
  5. பணம் செலுத்தும் போது பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்தவும்.
❂ கிரெடிட்,டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதற்கும் ஆன்லைன் கட்டண சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் என்ன வித்தியாசம்?
  1. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.
  2. ஆன்லைன் கட்டண சேவைகள் இடைத்தரகர்களாக செயல்படுகின்றன.
  3. கட்டண சேவைகள் மூலம் விரைவாக பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
  4. கட்டண சேவைகளைப் பயன்படுத்தும் போது, அட்டை விவரங்களைப் பகிர வேண்டிய அவசியமில்லை.
  5. கட்டண சேவைகள் சில நேரங்களில் இலவசத் திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன.
❂ பிஷிங் Phishing என்றால் என்ன, அதை தடுப்பது எப்படி?
  1. பிஷிங் என்பது இரகசிய தகவல்களைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாகும்.
  2. மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  3. பாதுகாப்பற்ற வலைத்தளங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்.
  4. பிஷிங் பாதுகாப்புடன் கூடிய வைரஸ் தடுப்பு மென்பொருட்களை பயன்படுத்தவும்.
  5. பிஷிங் முயற்சிகளை அடையாளம் கண்டு அறிந்து கொள்வதற்கு உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள்.
❂ சர்வதேச ஆன்லைன் நிறுவனங்கலிருந்து பொருட்களை வாங்குவது பாதுகாப்பானதா?
  1. இது குறித்த ஆன்லைன் நிறுவனங்களின் நற்பெயர் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தது.
  2. நிறுவனங்களின் ஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன் கொள்கைகளைச் சரிபார்க்கவும்.
  3. வரிகள் மற்றும் சுங்க வரிகள் போன்ற மேலதிக செலவுகளை ஆராயுங்கள்.
  4. பிற வாடிக்கையாளர்களின் மதிப்புரைகள் மற்றும் அனுபவங்களைப் படிக்கவும்.
  5. பாதுகாப்பான மற்றும் நம்பகமான கட்டண முறைகளைப் பயன்படுத்தவும்.
❂ ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது பொதுவாக நிகழும் தவறுகள் யாவை?
  1. விற்பனையாளறைப் பற்றி அல்லது குறித்த வலைத்தளத்தின் நம்பகத் தன்மையை சரிபார்க்காமல் விடுவது.
  2. பொருட்களை வாங்குவது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்காமல் விடுவது.
  3. வரிகள் மற்றும் ஷிப்பிங் செலவுகள் உட்பட மொத்த செலவுகளை மதிப்பாய்வு செய்யாமல் விடுவது.
  4. பணம் செலுத்தும் போது பாதுகாப்பான வழிமுறைகளைப் பயன்படுத்தாமல் இருத்தல்.

– Reezah Jesmin | SARINIGAR

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!